செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

Manoranjitham

                                மதிப்புரை
                               அபிநவபாரதி, கவிமாமணி மயன்

னக்கு அருகாமையில் நடைபெறும் நிகழ்வுகளையும், சம்பவங்களையும் சுவைபட எடுத்துக் கூறுவது ஒரு அருமையான கலைஅதனை மற்றவர்கள் ரசிக்கும்படிக் கூறுவது மிகச்சிறந்த கலையாகும்.   சிறுகதைகளும், நாவல்களும் எழுதுபவர்கள், சம்பவங்களுடன் தங்கள் கற்பனையையும் கலந்து உண்மை சம்பவம்போல எழுதும் திறன் படைத்தவர்களின் எழுத்துத்திறமை பாராட்டத் தக்கதாகும்அந்த வகையில் பெயருக்குத்தக்கபடி, மிகவும் வசீகரமான நடையில் சம்பவங்களில் மெருகூட்டி, படிப்பவர் நெஞ்சத்தை நெருடும்படி மிகவும் சுவாரஸ்யமாக எழுதப்பட்ட மனோரஞ்சிதம் என்ற நாவல் புதுமையுடன் திகழ்கிறது

இதற்குமுன், இந்த நாவலாசிரியராகிய ஆதனூரான், பல ஜனரஞ்சகமான நாவல்களைப் படைத்துள்ளார்கவரிமான் சிறுகதை, திரைப்படம் எடுக்கும் சம்பவங்களின் பின்னணியில் கம்பீரமாக நடைபோட்டதுவாழ்வியல்கதைகள் மாறுபட்ட எண்ணங்களைச் சித்தரிக்கும் சுவைமிக்க சம்பவங்களும், நிகழ்சிகளும் நிறைந்த சிறுகதைத்தொகுப்பாகும்வாசமலர்கள், உயிரில் கலந்த உறவு, கடமை கண்ணியம் காதல் ஆகிய நாவல்கள், உணர்ச்சிகளைத் தூண்டி, படிப்பவர்களை, புத்தகத்தைக் கீழேவைக்க முடியாமல் படிக்கச்செய்யும் தன்மை கொண்டனஇன்பக்கிளுகிளுப்பு, ஆச்சர்யம், சந்தேகம், கோபம், கருணை, துக்கம், அவலம் போன்ற சுவைகளைக்கொண்டு, உண்மைச் சம்பவம்போல அமைந்து, பல்லோரின் பாராட்டுக்களைப் பெற்றவை. மீண்டும் மீண்டும் படிக்கும் எண்ணத்தைத் தூண்டுபவைஅந்த நாவல்களைவிடபல வியக்கும்படியான நிகழ்வுகளுடன், துப்பறியும் சம்பவங்களையும் கொண்டு விறுவிறுப்பாக மனோரஞ்சிதம் நடைபோடுவதை, உணர்ந்து பாராட்டாமல் இருக்க இயலாது.

மனோரஞ்சிதம் நாவலாசிரியரான ஆதனூரான், ஒரு சிறந்த மரபுக்கவிஞர்எழில்மலர்கள், எழில் ஓவியங்கள், எழிலவனின் கவிதைப்பூங்கா போன்ற கவிதை நூல்களைப் படைத்த கவிமாமணி பாரதி எழிலவனாவார்அருமையான மரபுக்கவிதைகள், சந்த ஒழுங்குடன், சமூக அவலங்களையும், ஆன்மிக நிகழ்வுகளையும் பிபுலனாகக் கொண்டு அமைந்தனகவிதைக்காகவும், இலக்கிய மேம்பாட்டுக்காகவும் 700க்கும் மேற்பட்ட கவியரங்குகளை, நூற்றுக்கணக்கான கவிஞர்களைக் கொண்டு நடத்தி சாதனை படைக்கும், பாரதி கலைக்கழகத்தின் நிறுவனரான சொல்லின்செல்வர் சுராஜ் அவர்கள், எழிலவனின் கவிதைகளைப் பாராட்டி, கவிமாமணி என்ற விருதினை அளித்திருப்பது  குறிப்பிடத்தக்கதாகும்மரபுக்கவிஞராகவும் விளங்கும் ஆசிரியர் ஆதனூரான் அவர்களின் எழுத்தில் ஆங்காங்கே கவிதையின் மணம் வீசுவதையும் காணலாம்.

மனோரஞ்சிதம் என்ற இப்புதினம், துப்பறியும் சம்பவங்களையும் கொண்டு விறுவிறுப்பாக நடைபோடுகிறதுசெவ்வந்தியூரில் வாழ்ந்த ஜமீந்தார் சின்னசாமி அய்யர், மரகதம் அம்மாளின் பேரன் மனோகரன், பெயர்த்தி ரஞ்சிதம்.   அண்ணன் தங்கையின் வாழ்வில் நடந்த சம்பவங்களை விவரிப் பதால், மனோரஞ்சிதம் என்ற மகுடத்தை இந்நாவல் பெற்று மிளிர்கிறதுமனோகரனின் தந்தை பசுபதியும், அவரது மனைவி ராஜம், பாட்டனார் சின்னசாமி அய்யர், பாட்டி மரகதம் ஆகியோர் காரில் வெளியூர் சென்று வரும்போது, அனைவரும் மரணம் அடைந்ததைவிபத்தாகக் கருதிய காவல் துறையின் கணிப்பை மாற்றிஅது ஒரு திட்டமிட்ட கொலைதான் என்பதை தனது நுண்னறிவின் மூலம் மனோகரன் கண்டுபிடித்த சாமர்த்தியத்தை, நாவல் திறம்பட விளக்குகிறதுபோலீஸ்காரர்களும், அந்த நிகழ்வை ஒரு சாதாரணநிகழ்வு என்று தீர்மானித்தபின், மனோகரன், அதனை கொலை என்றும், அதற்குத் திட்டமிட்டவர்கள், உதவியவர்கள், கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் யார் என்பனபோன்ற மிக சாதுர்யமாகக் கண்டுபடித்த விவரங்களை படிக்கும்போது மிகவும் வியப்படைகிறோம்.   மனோகரனின் அறிவாற்றலினால் துப்புத்துலக்கப்படும்போது, சாதாரண விபத்து, கொலையானது பற்றியும், அதன் பின்னணி சம்பவங்களும் நம்மை புல்லரிக்கச் செய்கின்றன.

தனது பெரியம்மா கோமளத்தின் தூண்டுதலினால், பெரியப்பா சங்கரன் செய்த கொடுமைகளை இனிய முகத்துடன் தாங்கிக்கொண்டு, சென்னைக்கு அருகிலுள்ள மறைமலை நகரில் தங்கி,, ராமசாமி அய்யங்காரின் பூர்விக சொத்துக்களையும், அதன் அருகிலுள்ள நிலத்தையும் வாங்கி, அங்கு, தனது முன்னோர்கள் வாழ்ந்த செவ்வந்தியூரை மனத்தில் கொண்டுநவீன முறையில் காய்கறிப்பண்ணை ஆரம்பித்த நிகழ்வுகள்இயற்கையாகவே நடைபெறுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளன.

தனது நண்பன் சோமுவிற்கு, தங்கையைத் திருமணம் செய்து கொடுத்ததையும், அவனது கல்லூரிப் பருவத்தில் அவனது கல்லூரிப் பேராசிரியராக இருந்த பஞ்சாட்சரத்தின் மகளான நளினியை காதலித்துத் திருமணம் செய்துகொண்டதையும் மிக சுவைபட ஆசிரியர் விளக்கியுள்ளார்.

நிலம் கொடுத்த ராமசாமி அய்யங்காரின் பெயர்த்தி அனுக்ரஹாவின் காதலை நாசுக்காகத் தவிர்த்து, நளினியைக் கரம்பிடித்ததை மிக அழகாக சித்தரித்துள்ளார்அனுக்ரஹாவின் சகோதரன் ராகவனின் குரோத மனப்பான்மையை சமாளித்துஅவன், மனோகரனிடம் விரோத மனப்பான் மையுடன் இருந்தாலும்அவனுக்குப் ப்ரமோஷன் கொடுத்து, அக்கம்பெனியின் கிளை அலுவலகத் திற்கு தலைமைப் பொறுப்பிற்கு கருணை சார்ந்த சிபாரிசு செய்ததையும்ராகவன் மனோகரனின் தங்கைக்கு இழைத்த கொடுமையையும் படிக்கும்போது ஆசிரியரின் நுண்ணறிவு பளிச்சிடுவதைக் கண்டு வியக்கிறோம்.

காந்திய நிர்மாண திட்ட முறைகளை அனுசரித்துஇயற்கை வளங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதும்பயிரிட்டு விளைந்த பொருள்களை அடக்கவிலைக்கே விற்று, பண்ணையின் வருமானத்தைப் பெருக்கிய விதங்களும், பண்ணையில் விவசாயம் செய்யும் தொழிலாளர்களுக்கு தங்க வசதியாக வீடுகட்டிக் கொடுப்பதும், விளைபொருள்களைக் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்துவதும், முன்மாதிரியான நிகழ்ச்சிகளாக அமைந்துள்ளன.

தனது தந்தையின் கொலைக்குக் காரணமாக இருந்தவர்களுக்கு, மறைமுகமாக உதவிசெய்த பெரியம்மா, பெரியப்பா மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும், தனது, மற்றும் தங்கை ரஞ்சிதத்தின் திருமணத்திற்கு அழைத்து, அவர்களைக் கௌரவப்படுத்தி ஆசிபெற்றுக் கொண்ட உயர்ந்த தன்மையைத் தனது மனோரஞ்சிதம் நாவல் மூலம் ஆசிரியர் அழகாக வெளிப்படுத்தியுள்ள பாங்கு பெரிதும் பாராட்டத்தக்கதாக விளங்குகிறது.   இதற்குமுன் படைத்த நாவல்களைவிட, மனோரஞ்சிதம் நாவல் எல்லா வகையிலும் சிறப்புற்று விளங்குவதைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

கற்பனை வளமும், எழுத்துத் திறனும், கவிதை ஆற்றலும் போட்டிபோட்டுக் கொண்டு மனோரஞ்சிதம் நாவலுக்கு மெருகேற்றி விறுவிறுப்பாகக் கதையைக் கொண்டுசெல்கிறதுபடிப்பவர்களின் ஆவலைத்தூண்டி, கிழே வைக்க முடியாமல் முழுப்புத்தகத்தையும் ஒரேமூச்சில் படிக்கும்படி எழுதியுள்ள ஆசிரியர் ஆதனூரான், நாவலுலகில் சிறப்பான இடத்தைப் பெற்று  விளங்குகிறார் என்பதில் ஐயமில்லை.

இதைப்போன்ற சிறந்த பலபடைப்புகளைத் தமிழகத்திற்குத் தரவேண்டி, நல்ல உடல்வளமும், கற்பனா சக்தியும்எழுத்தாற்றலும் நாவலாசிரியர் ஆதனூரானுக்கு அருளவேண்டி, எல்லாம்வல்ல அன்னை மஹாசக்தியின் மென்மலர்ப்பாதங்களில் மனம் மொழி மெய்களால் பிரார்த்திக்கிறேன்.
                                                                           கவிமாமணி மயன்.
1/300, மஹாகவி பார்தியார் தெரு,
எம்.ஜி.நகர் – 9வது விரிவு,
ஆதனூர் – 603 202.
மாடம்பாக்கம்  அஞ்சல்
கூடுவாஞ்சேரி  வழி.









                                                   ஆதனூரான் பேசுகிறேன்


அன்புள்ள வாசகப்பெருமக்களுக்கு, ஆதனூரானின் அன்பு வணக்கங்கள்.  இப்பொழுது உங்க்கள் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கும் மனோரஞ்சிதம் என்னும் புதினம், எனது முந்தைய புதினங்களிலிருந்து சற்று மாறுபட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.  எனது மற்ற புதினங்களைப்போல, இந்த மனோரஞ்சிதமும் உங்களின் மனதைக் கவரும் ஒரு புதினமாகத் திகழும் என்பதில் எனக்கு கிஞ்சித்தும் ஐயமில்லை.

இந்த புதினத்தில், தற்காலத்து இளைஞ்னின் மனத்தில், காந்தீயக் கொள்கை விரவி இருப்பதை நான், சற்று வி¡¢வுபடுத்திக் காட்டியிருக்கிறேன்.  அத்துடன், எவ்வளவு மேல்படிப்புகள், இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார்ப்போல படித்திருந்தாலும், விவசாயமும் ஒரு மேல்படிப்புதான் என்பதையும், விவசாயத்தையும், ஒரு பொ¢ய தொழிலாகச்செய்து, நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை செய்யும் பொருட்டு, உழைப்பதும், தானும் தொழிலில் சிறந்து, தம்மிடம் பணியாற்றும் பணியாளர்களுக்கும் அவர்களது தேவையை சிறப்புற நிறைவு செய்து, தானும் வாழ்ந்து  தம்மைச் சார்ந்தவர்களும் சிறப்பாக வாழவகை செயதல் வேண்டும் என்ற சிறந்த நோக்கத்தை இங்கு கோடிட்டிருக்கிறேன்.  இதனால்  நாட்டில் வளம் கொழிக்கும், பணியாளர்கள் வருமையின்றி வாழ்வார்கள்.  பாரதத்தில் ஒரு மருமலர்ச்சி தோன்றும் என்ற நம்பிக்கையுடன்தான் இப்புதினத்தை வடித்திருக்கிறேன்.

இந்த புதினத்தில், விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும்இதில் மனிதர்களின் மனவக்கிரங்களையும், அதனால் வரும் பாதிப்புகளையும், அதில் பந்தபாசங்கள் அடிபட்டுப் போகின்றன என்பதையும் ஒரு துப்புறியும் நாவலைப்போல சமைத்திருக்கிறேன்.  அத்துடன், அதீத காதலைக் காட்டாமல்காதல் கொள்ளும் வாலிப உள்ளங்களின் மன ஆசைகளையும்அழகின் ஈர்ப்பையும் சற்று விரசமில்லாமலும்எவர்மீதும் மாசுபடியாமலும் காட்டியிருக்கிறேன்.

பணம் செல்வம் என்று வரும்பொழுது, சாதிகள்கூட மறுக்கப்படுவதில்லை என்பதையும் நாசூக்காகக் காட்டியிருக்கிறேன்.  எவ்வளவுதான் படித்திருந்தாலும், உயர் பதவியில் இருந்தாலும், மற்றவர்களையும் மதிக்கவேண்டும், வீணான குரோதத்தையும், பொராமை கொள்ளுதலையும் விடுத்து, வீண் பழி பாவங்களைச் சுமக்காமல் இருத்தல் நலம்பயக்கும் என்பதையும் சுட்டியிருக்கிறேன்.

இந்த நாவல் நிச்சயம் வாசகர்களின் உள்ளத்தில் நிறைகொள்ளும் என்ற நம்பிக்கையுடன், வாசகர்கள், இந்த புதினத்தைப் படித்து தங்களது மேலான கருத்துக்களை எனக்குத் தொ¢யப் படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையுடனும் அனைவருக்கும் எனது பணிவான நன்றியை தொ¢வித்துக் கொள்கிறேன்.

இந்த நாவல் எனது செந்த கற்பனையே அல்லாமல், எந்த ஊரையும், எந்த நபரையும், எந்த சம்பவங்களையும் குறிப்பிடுவன அல்ல என்பதையும் இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

                                                                                               தங்கள் அன்பன்
                                                                                              (பாரதி எழிலவன்)
முகவா¢:
ரெ. வைத்யநாதன்
1/301, மஹாகவிபாரதியார் தெரு,
எம். ஜி. நகர் - 9 வது வி¡¢வு,
ஆதனூர் - 603 202.
மாடம்பாக்கம்  அஞ்சல்
கூடுவாஞ்சோ¢ வழி.

                                                            
                                                 மனோரஞ்சிதம்
                                                  1.

அந்த கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. செவ்வந்தியூர் என்பது அந்த கிராமத்தின் பெயர். அந்த கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் அந்த கிராமத்துப் பண்ணையார் சின்னசாமி அய்யரை நம்பியே தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர். அந்த கிராமத்தில் உள்ள ஏறக்குறைய அனைத்து விவசாய, மற்றும் புன்செய் நிலங்களும் அந்த பண்ணையாரான சின்னசாமி அய்யருக்கே சொந்தமானதாகும். பரம்பரை பரம்பரையாக அவர்கள் அந்த கிராமத்தை நிர்வகித்து வருகிறார்கள். ஏறக்குறைய ஒரு அரசாங்கமே அங்கு நடக்கிறது.  ஆனாலும் நல்லாட்சியே நடந்து வருகிறது. தன்னிடம் பணியாற்றும் அனைவரையும் தமது குடும்பத்தாரைப்போலப் பேணி காத்து வருகிறார் என்றால் அது மிகையாகாது.

சின்னசாமி அய்யருக்கு இரண்டு புதல்வர்களும், ஒரு புதல்வியும் உண்டு. புதல்வி ஜெயந்திதான் மூத்தவள். அவள் திருமணமாகி தற்போது அமொ¢க்காவில் வசித்து வருகிறாள். அடுத்தவன் சங்கர நாரா யணன், அவனுக்கு அடுத்தவன் பசுபதி. மூத்தவனான சங்கரன் மிகுந்த கோபக்காரன். தனது தந்தைக்கு நேர் மாறானவன். அவனுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். மூத்த மகனின் பெயர் சிவக்குமார் வயது இருபத்தி ஐந்து, இரண்டாவது மகன் பெயர் சீனிவாசன்.வயது இருபத்தி மூன்று. அடுத்ததாக சியாமளா-இருபத்தி ஒன்று, இந்திரா வயது பதினெட்டு என்றுஇரண்டு மகள்களும் உண்டு. அடுத்து பசுபதிக்கு மனோகரன் என்னும் இருபத்தி மூன்று வயதுடைய மகனும், ரஞ்சனி என்னும் இருபத்தியோரு வயதுடைய மகளும் உள்ளனர். சின்னசாமி அய்யா¢ன் மனைவி மரகதம் அம்மாள். அவளும் மிக்க நல்லவுள்ளம் கொண்டவள். மிகுந்த ஈகை குணமும், அன்பும் பாசமும் கொண்டவள். அவளது மூத்த மருமகள், அதாவது சங்கரனின் மனைவி கோமளம், தனது கணவனுக்கேற்ற மனைவி. அவனைவிட பல மடங்கு அதீத குணம் படைத்தவள்.  பசுபதியின் மனைவியோ, தனது கணவனைப் போல சாந்த குணம் படைத்தவள்.  சங்கரனின் குடும்பம் தனியாக ஒரு பொ¢ய இல்லத்தில் வசித்து வருகிறார்கள்.
               
சின்னசாமி அய்யர் தனது மாளிகையில், தனது இளைய மகன் பசுபதியுடனும், தனது மனைவி, மருமகள், பெயரன், பெயர்த்தி அனைவருடனும் வசித்து வருகிறார்.  அவருடைய இல்லத்தில்தான் பெயர்த்தி சியாமளா விற்கு வளைகாப்பும் சீமந்தமும் செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால்தான் அந்த ஊரே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. சியாமளாவிற்கு சென்ற வருடம்தான் திருமணம் நடந்தது. இந்த வருடம் வளைகாப்பு சீமந்தம் நடக்கிறது. மாப்பிள்ளை கார்த்திகேயன் சென்னையில் ஒரு அயல்நாட்டு நிறுவனத்தில் பொ¢ய உத்தியோகத்தில் இருக்கிறானாம். மாதம் ஒரு லக்ஷத்திற்கு மேல் சம்பளம் இருக்குமாம்.

செவ்வந்தியூர் அப்படியொன்றும் பொ¢ய கிராமமல்ல. கிட்டத்தட்ட நூறு ஏக்கர் சாகுபடி நிலமும், புஞ்சை நிலமும் இருப்பதால் அந்த நிலங்களில் வேலை செய்யும் வேலையாட்கள் தங்கி வாழுகின்றனர். இவர்களெல்லாம் சின்னசாமியின் தாத்தா காலத்திலிருந்தே பரம்பரை பரம்பரையாக வேலை செய்து வருகிறார்கள்.  அனைவரும் குடிசைகளில் வாழவில்லை. அனைவருக்கும் ஓட்டு வீடுகள் கட்டித் தரப்பட்டி ருக்கின்றன. அனைவருக்கும் மாதச்சம்பளம் போக, ¡¢சி, புளி,மளிகை சாமங்களும் மலிவு விலையில் கொடுக்கப்படுகின்றன. விளைச்சலுக்கு ஏற்ற வகையில் வருடா வருடம் நெல், மூட்டைக் கணக்கில், அந்தந்த வீட்டு நபர்களின் எண்ணிக்கையைக் கொண்டு அளக்கப்படுகிறது. வருடா வருடம் பொங்கல், தீபாவளிக்கு அனைவருக்கும் துணிமணிகள் எடுத்துக் கொடுக்கப் படுகிறது. ஆச்சர்யமாக இருக்கிறதா? இந்த காலத்திலும் இப்படியெல்லாம் நடக்கிறதா என்று ஆச்சர்யப்படாதீர்கள். நிச்சயமாக நடக்கிறது.  இன்றுவரையில், சின்னசாமி அய்யா¢ன் தலை உள்ள வரையில் நடக்கும் பின்னால் வரும் காலங்களில் எப்படி நடக்கும் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல இயலாது. ஏனெனில், கோமளத்தின் மனது அப்படி. கோமளம் கொடுக்கக் கூடாது என்றால் சங்கரன் கப்சிப். வாயைத் திறக்க முடியாது. அவளை எதிர்த்துப் பேசினால் பத்ரகாளி ஆகிவிடுவாள். சங்கரன் முதல் குழந்தைகள் வரையில் அனைவரும் அவளுக்கு அடக்கம். பசுபதி, சங்கரனுக்கு நேர் மாறானவன். பாப,புண்ணியங்களுக்குப் பயப்படுபவன். மானஸ்த்தன். அதிர்ந்து பேசமாட்டான்.  பசுபதியின் மனைவியும் அவ்வாறே அவர்களது குழந்தைகளும் அவ்வாறே வளர்க்கப்பட்டிருக்கின்றனர். மனோகரன் தனது தாத்தாவிடம் அதிக வாஞ்சையுள்ளவன். ரஞ்சிதமும் தாத்தாவின் செல்லப் பெயர்த்தி. பசுபதி தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்பவன் அல்லன். தனது தந்தையும், அண்ணனும் என்ன சொல்கிறார்களோ அதன்படி பிசகாமல் நடப்பவன். அண்ணன் சங்கரன், மதனியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு இவனுக்கு லாபத்தில் பங்கு கொடுக்காமல் பசுபதி செய்யும் வேலைக்கென்று ஒரு தொகையை மட்டும் கொடுப்பான். தந்தைக்கு வயதாகிவிட்டதால், பண்ணை நிர்வாகத்தை சங்கரனே பார்த்துக் கொள்கிறான். பசுபதி அவனுக்குத் துணையாக அவன் ஏவும் வேலைகளைச் செய்வான்.  ஆனாலும் பணியாளர்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பவன் பசுபதியே. பசுபதி ஒருநாள் இல்லையென்றாலும் அன்றைய பணி நடப்பது கடினம்தான்.  சங்கரன், இதனால்தான் பசுபதியிடம் வேலை வாங்கினாலும், அதிகமாகக் கோபப்படாமல், சற்று நிதானமாகவே பேசி பசுபதியிடம் கா¡¢யத்தை சாதித்துக் கொள்வான். கோமளமும் அவ்வப்போது பசுபதியிடம் கபட நாடகம் ஆடுவதும் உண்டு.

சின்னசாமி அய்யரால் இவைகளைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கத்தான் முடியுமே அல்லாது, அதிகமாக பண்ணைக் கா¡¢யங்க்களில் தலையிடமுடியாது.  ஆனால் பண்ணைப் பணியாளர்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியத்திலோ, சலுகைகளிலோ எவரும் பாரபட்சம் காட்டாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்வார். கூடுமானவரையில் தலைமைப் பொறுப்புகள் அனைத்தையும் அவர் தம்மிடமே வைத்திருந்தார்.  அதனால் எல்லாம் சா¢யாகவே நடந்துகொண்டு வருவதுபோல் தோற்றமளித்தது. அவருக்குத் தொ¢யாமல் கணக்கில் கைவைத்து சங்கரனும் அவனது துணைவியும் கையாடல் செய்வது தொ¢ந்திருந்தும் கண்டுகொள்ளாமல் இருந்து விடுவார். அதனால், அவர், சிறிது தொகையை பசுபதி பெயா¢லும், அதற்கு வா¡¢சாக மனோகரைப் போட்டும், மனோகா¢ன் பெயா¢லும், ரஞ்சிதத்தின் பெயா¢லும் சிறிது தொகையை வங்கியில் போட்டும் வைத்திருந்தார். இந்த விஷயம் எவருக்கும் தொ¢ய வாய்ப்பில்லை.  சின்னசாமி மற்றவர்களை எடைபோடுவதில் வல்லவர் என்பது இதன் மூலம் நிறூபணம் ஆகிறதல்லவா?!

செவ்வந்தியூர் கிராமத்தில், மொத்தமாகக் கூட்டிக் கழித்துப் பார்த்தால், சின்னசாமி, சங்கரன் வீடுகளைத்தவிற நூற்றுப் பத்து வீடுகள் இருக்கும். அதில் பணியாளர்கள் இல்லங்கள் போக மீதம் உள்ளவை, ஒரு மருத்துவமனை, ஒரு பள்ளிக்கூடம், ஒரு கோவில் என்றும் அதில் பணி பு¡¢பவர்களுக்கான இல்லங்கள் என்றும்தான் இருக்கும். அனைத்தும் சின்னசாமி பண்ணையால் பராமா¢க்கப்படுகின்றன என்பதுதான் உண்மை. பள்ளிக் கூடம்கூட அரசாங்கத்தால் அங்கீகாரம் பெற்ற பள்ளி, பனிரெண்டாம் வகுப்புவரையில் உள்ளது. அந்தப் பள்ளிப் படிப்பு முடிப்பவர்கள் கல்லூ¡¢யில் படிக்கவேண்டுமெனில் அருகில் உள்ள நகரத்தில் இருக்கும் கல்லூ¡¢யில் போய்ப் படிக்கவேண்டும்.  எப்படியும் அந்த ஊ¡¢ல் மொத்தம் ஐந்து தெருக்களும், ஒரு ப்ரதான சாலையும் உண்டு.

சியாமளாவின் வளைகாப்பு வைபவம் காரணமாகத் தெருவெங்கும் மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தாலும், அந்த ஊர் கோவிலில் சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அன்று இரவு பெருமாளுக்கும் சிவனுக்கும், பிள்ளையாருக்கும், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.  தன் வீட்டு விசேஷங்களுக்கு, ஊர் மக்களைக் கஷ்டப் படுத்தி ஊர் முழுதும் கோலாகலமாகக் கொண்டாடுவது சின்னசாமிக்குக் கட்டோடு பிடிக்காது என்றாலும், கோமளாவின் எதேச்சாதிகாரத்தனத்தை அவரால் கண்டிக்க முடியவில்லை. ஏனெனில், இவர் ஏதாவது சொல்லப்போய், இவரை எதிர்த்து அவள் ஏதாவது சொல்லிவிட்டால், தன் மதிப்பு எங்கே குறைந்து விடுமோ என்ற அச்சம்தான் காரணம். இப்படியாக செவ்வந்தியூர் கோலாகலப்பட்டுக் கொண்டிருந்தது.

கோவில் அபிஷேக ஆராதனைகளும், மறுநாள் வளைகாப்பு, சீமந்த வைபமும் சிறப்பாகக் கொண்டாடப் பட்டன. எல்லாம் இனிதே நடந்தேறியது.  சின்னசாமி அய்யா¢ன் இல்லத்தின் முன்பாக பொ¢ய பந்தல் போடப்பட்டு, விருந்தாளிகள் அமர்வதற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஒரு புறம் சமையல் நடந்து கொண்டிருக்க, மற்றொரு புறம் சாப்பிட மேசை நாற்காலைகள் போடப்பட்டு விருந்து நடந்து கொண்டிருந்தது.   சம்பந்தி வீட்டாரே நூறுக்கும் மேலே வந்திருந்தனர். நான்கைந்து கார்கள் அமர்த்தப்பட்டு  போவதும் வருவதுமாக இருந்தது.  நல்ல கூட்டம்  ஊர் நிறைந்திருந்தது.  சின்னசாமி அய்யருக்கு வருவோரைக் குசலம் விசா¡¢ப்பதற்கே சா¢யாயிருந்தது. அங்கும் இங்குமாக அனைவரும் ஓடியாடி அனைவரையும் வரவேற்று உபசா¢த்தனர். இதில் அதிகமாக அனைவரையும் உபசா¢த்தது மனோகரும், ரஞ்சிதமும்தான் என்றால் அதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. சங்கரனின் புதல்வர்கள் அவர்களுடைய  நண்பர்களுடன் அரட்டை அடிக்கவே நேரம்சா¢யாயிருந்தது.  கோமளமும், தனது குழந்தைகளை ஏதும்சொல்லாமல் மனோகர், ரஞ்சிதத்தையே அதிகமாக வேலை வாங்கினர். இதில் பசுபதியும் விலக்கல்ல. கோமளம், சங்கரன் தம்பதிகளைப் பொறுத்தவரையில், தாங்கள்தான் பொ¢யவர்கள் என்றும் மற்றவர்கள் அனைவரும் தாம் சொல்படி ஆடவேண்டியவர்கள் என்றும் எப்பொழும் எண்ணம் கொண்டிருப்பதுதான் காரணம்.

செவ்வந்தியூரைப் பற்றி சொல்லவேண்டுமானால், அந்த ஊர் மிக்க அதிர்ஷ்ட்டம் செய்திருக்க வேண்டும். இருநூறு வருடங்களுக்கு முன் அந்தவூர், பக்கத்தில் உள்ள ஊரான அந்திமங்கலத்துடன் இணைந்திருந்தது. அப்பொழுது செவ்வந்தியூர் என்ற பெயரே இல்லை. அந்தி மங்கலம் என்பதுதான் அதன் பெயர்.  நாற்பது ஐம்பது தெருக்களையும் ஏறாளமான வயல்வெளிகளையும், பனை, தென்னை, கமுகு, ஈச்சம் போன்ற பலவகையான மரங்களையும் வளமாகப் பெற்றிருந்தது. அபொழுது சின்னசாமியின் தாத்தா ரங்கசாமியும், அவரது அண்ணன் நாகராஜனும் சேர்ந்து அந்த ஊரை நிர்வகித்து வந்தனர். அவர்கள் அந்த சுற்று வட்டாரத்திலேயே பெரிய பண்ணையாக விளங்கினர். நல்ல செழிப்போடும், அழகாகவும்தான் அந்த கிராமமும், கிராம நிர்வாகமும் விளங்கியது. அண்ணன் தம்பி இருவருக்கும் நல்ல ஒற்றுமை இருந்த போதிலும், இருவருக்கும் திருமணமாகி குழந்தை குட்டிகள் பிறந்த பின்னர்,  அவர்களுக்கு வாய்த்த மனைவியர் மூலமாகவும், அவர்களின் பிறந்த வீட்டார் மூலமாகவும் இரு குடும்பங்களுக்கும் இடையே ஒற்றுமை குலைய நேரிட்டது. அது நாளடைவில் சண்டையாக வலுப்பெற்று, பாகப்பிரிவினைவரை சென்றுவிட்டது.

அந்திமங்கலம் கிராமம், விழுப்புறத்திற்கும் திருச்சிக்கும் செல்லும் சாலையில், விழுப் புறத்திற்கும் உளுந்தூர்ப்பேட்டைக்கும் இடையில் அமைந்திருந்தது அந்த கிராமத்தை அந்த காலத்தில் தெரியாதவர்களே இல்லை. ஏனெனில் அங்குதான் அதிக விளைச்சல் இருந்தது..காய்கனிகள் உட்பட அனைத்துப் பொருள்களும் அங்கு பயிரிடப்பட்டதால் எப்பொழும் லாரிகளும், வாகனங்களும், சிறு ஊர்திகளும் வந்து போனவண்ணம் இருந்தன. அந்த ஊரை இரண்டாகப் பிரித்தது நடுவில் இருந்த ஒரு ஏரி. அதுதான் அண்ணன் தம்பிகளுக்கிடையே பாகம் பிரிக்க ஏதுவாக இருந்தது. ஏரியிலிருந்து, ப்ரதான சாலைவரையில் உள்ள இடம் செவ்வந்தியூர் என பெயர் சூட்டப்பட்டதற்குக் காரணம்,, அங்கு செவ்வந்திப்பூக்கள் அதிகமாக விளைந்ததே காரணம் மற்ற பயிர் வகைகளெல்லாம் அவ்வளவாக விளையவில்லை. அதனால் அதிகமாக விளைச்சல் உள்ள இடத்தைப் பெரிய சகோதரரும், அதிகமாக விளைச்சலில்லாத செவ்வந்தியூரை இளையவருக்கும் பாகம் பிரிக்கப்பட்டது. அதன்பிறகு இளையவர் பலவாறாக முயன்று செவ்வந்தியூரை விளைச்சல் மிக்க நிலமாக மாற்றினார். அதன்பிறகு அவர் மகனும், அவருக்குப்பிறகு சின்னசாமியும் பராமரித்து வந்தனர்சின்னசாமியின் காலத்தில்தான் விவசாயிகளின் இயலாமையையும், துன்பங்களையும் புரிந்துகொண்டு. அவர்களுக்கு, வீடு கட்டிக் கொடுத்தும், அந்த ஊரில் கோவில் சமைத்தும், பள்ளிக்கூடம் அமைத்து அதற்கு அரசாங்க அனுமதி வாங்கியும், மேலும் பாசனத்திற்காக ஊரின் ஆங்காங்கே சில குளங்களை வெட்டியும் என்று பல வசதிகளைச் செய்தார். அதனால் அந்த ஊர், கோடைக்காலத்திலும் நீர் வரட்சியில்லாமல், வளத்துடனேயே எப்பொழுதும் இருந்தது அதனால் பணியாட்கள் அந்த ஊரைவிட்டுச் செல்லவும் முற்பட்டதில்லை. ஆனால் அந்திமங்கலம், காலப்போக்கில் பலபேர்களின் கைமாறி, தற்சமயம், அதிக விளைச்சல் இல்லாத மக்கள் வசிக்கும் பல தெருக்களைக் கொண்ட சிறு நகரமாக மாறிவிட்டது. ஒரு காலத்தில் செவ்வந்தியூரை ஏளனமாக எண்ணி ஒதுக்கியவர்கள் இப்பொழுது செவ்வந்தியூரில்தான் வாணிபம் நடத்துகிறார்கள் என்பதுதான் உண்மைநிலை. இப்பொழுது (இந்த ஊர் எனது கற்பனையூர் ஆனாலும்) வாசகர்களுக்கு செவ்வந்தியூரைப் பற்றி நன்கு விளங்கியிருக்கும்.) இப்பொழுது நாம் கதைக்குள் செல்வொமா;.?

சின்னசாமி அய்யரின் மாளிகை, அவரது பெயர்த்தியின் வளைகாப்பு, ஸ்ரீமந்தம் முடிந்து அனைவரும் கலைந்து சென்று வெரிச்சோடிக்கிடந்தது. இரண்டு மூன்று நாட்களாக அல்லோகல்லோகப் பட்டுக்கொண்டிருந்த அந்த கிராமத்தில் இயல்பு வாழ்கை திரும்பத்தொடங்கியது. சமையல்காரர்களால் மிகுதியிருந்த சாப்பாட்டையும், பொருட்களையும், ஒப்படைக்கப் பட்டதை, இரண்டு வீட்டுக்குமாகப் பிரித்துக் கொண்டிருந்தாள் கோமளம். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சின்னசாமி அய்யர், ``அம்மா கோமளம், ஏன் வீணாக சிரமப்படறே? இதிலெல்லாம் பாகம் பிரிக்கவேண்டாம்மா. நாங்க ராத்திரிக்கு சாப்பிட போதுமானதை வெச்சுட்டு, நீ எடுத்துண்டு போ. உங்க குடும்பத்துக்குப் போக மீதத்தை, வேலைக்கார்ர்களுக்கு அவர்கள் பிரியப்பட்டால் மட்டும் கொடுஎன்றார்.

``வேண்டாம்பா, எல்லாத்தையும் சரிசமமா பிரிக்கறதுதான் நல்லது. ஏன்னா, நாளைக்கு என்மேலே ஒரு பொல்லாப்பும் வரப்படாது பாருங்கோஎன்றாள் கோகிலா.

``ஏம்மா,இப்படிப் பேசறே? யார் உன்மேலே பொல்லாப்பு சொல்லப்பொறா? ஒருத்தரும் ஒண்ணும் சொல்லமாட்டா, எங்களுக்கு ராத்திரிக்கு சாப்பிடறதுக்குக் கொஞ்சம் வெச்சுட்டுப்போ போதும்.” என்றார் சின்னசாமி அய்யர் சாந்தமாக.

``வேண்டாஞ்சாமி, எப்போ அண்ணன் தம்பின்னு தனித்தனியா பிரிஞ்சாச்சோ, எல்லாமே சமமாத்தான் பிரிச்சாகணும். என் கடமையை நான் செஞ்சுடறேன். தப்பா நினைச்சுக்காதேங்கோ அப்பாஎன்று சற்று ஆணவமாக பதிலிருத்தாள் கோமளம்.

``அக்கா. அப்பாதான் சொல்றாரே. எங்களுக்கு சரிபாதியெல்ல்லம் வேண்டாங்கா, நம்ம சியாமளாவோட வளைகாப்பு பங்ஷந்தானே, எல்லாமே நீங்க செலவு பண்ணினதுதானே. இதிலே என்ன பாகப்பிரிவினை.? நாமெல்லாரும் தனித்தனியா தனித்தனி ஆத்துல வாழ்ந்துண்டிருந்தாலும், ரெண்டு குடும்பமும் ஒண்ணுதானேக்கா.: ஏன் பிடிவாதம் பிடிக்கிறேள்?” என்று பசுபதியின் மனைவி ராஜம் சொல்ல, ``என்ன நீ என்னை பிடிவாதக்காரிங்கறே? இந்தாத்துக்குப் பெரிய மாட்டுப்பொண்ணுன்னு கொஞ்சம்கூட மரியாதை இல்லாம, ஒங்காத்து பங்ஷனுக்கு நீ செலவு செஞ்ச சாமான்களை நியே எடுத்துண்டு போங்கறே? என்ன வாய் ரொம்ப நீள்றது?” என்று கோமளம் கோபப்பட்டாள். ராஜலக்ஷ்மியின் கணவன் பசுபதி ராஜத்தை மெள்ளத் தொட்டான், திரும்பிப் பார்த்த ராஜத்திடம் பேசாதே, போ என்பதற்கு அடையாளமாக ஜாடைசெய்தான். `` சரி அக்கா உங்க இஷ்ட்டம்.” என்றபடி உள்ளே ஓடிவிட்டாள்

இது என்ன விசித்திர சண்டை என்று பார்க்கிறீர்களா? இது ஒன்றும் புதிதல்ல. ஒன்றும் இல்லாத விஷயத்திற்கெல்லாம் கோமளம் மற்றவர்களின்மேல் பழிபோட்டு அதட்டுவதும், சண்டை பிடிப்பதும் வாடிக்கையாக நிகழ்வதுதான்தான் செய்வது, சொல்வதுதான் சரியென்று எப்பொழுதுமே கோமளம் நினைப்பதால், அவளுடன் யாரும் அதிகமாக உறவாடமாட்டார்கள். இருந்தாலும், பேசாமல் இருந்தால் தம்மீது அதற்கும் குற்றம் கண்டுபிடித்துக் கோபிப்பாள் என்பதால், ராஜம் ஏதாவது பதில் சொல்லி வாங்கிக் கட்டிக்கொள்வதும் வழக்கமாகிவிட்டது. இப்படியாக அன்றய பொழுது ஓடிவிட்டது.

அன்று இரவு, சின்னசாமி, தனது புதல்வன் பசுபதியிடம், ``என்னடா இது பசுபதி, இந்த கோமளம் மாறவே மாட்டாளா? எதுக்கு இப்படிக் கோவிச்சுக்கறா? பாவம்டா சங்கரன். இவகிட்டே மாட்டிண்டு ரொம்பவே அவஸ்த்தைப்படறான். குழந்தைகளையும் நல்லபடியா வளர்க்காம, கெடுத்துக் குட்டிச்சுவராக்கிட்டாளே.” என்று ஆதங்கப்பட்டார்

``போகட்டும்பா, விடுங்க. அவளோட சுபாவம் அப்படி.  இருந்துட்டுப் போகட்டுமே. விடுங்கப்பாஎன்று தனது தந்தைக்குச் சமாதானம் சொன்னாலும், பசுபதியின் நெஞ்சம், கோமளம் தனது மனைவியை கோபித்துக் கொண்டதை நினைத்து வருத்தப்படத்தான் செய்தது.

இங்கு இப்படியிருக்க, சங்கரன் வீட்டிலோ, கோமளம் தனது பெருமையைப் பீற்றிக்கொண்டாள். ``ஏன்னா, உங்கப்பாவும்சரி, உங்க தம்பி பொண்டாட்டியும் சரி, ஏன்னா என்னைக் கரிச்சுக் கொட்டறா? நான் எல்லாருக்கும் நல்லதைத்தானே செய்யறேன். மீந்திருந்த சாமானெல்லாத்தையும் சரிசமமா பங்குபோட்டுக் கொடுக்கலாம்னு நல்லெண்ணத்தோட செஞ்சா, ரெண்டுபேரும் குருக்கே விழுந்துன்னா தடுக்கறா. நான் நன்னா நாக்கைப் பிடிங்கிக்கறமாதிரி கேட்டுட்டேனே. என்ன சொல்றேள்என்று சங்கரனைக் கேட்க., ``என்னவோ பண்ணுடி, எனக்கென்னமோ அவா சொல்றதுதான் சரின்னு படறது. நீ என்னமோ சகஜமா இருக்கறமாதிரின்னு நினைச்சுண்டு அவாளைக் கேவலப் படுத்தறேஎன்றான்.

``இதோ பாருங்கோன்னா, இப்போவே அவாளை, வாயைத்தொறக்கவிடாமல் நம்ம கட்டுப்பட்டுக்குள்ளே வெச்சுக்கணும். அப்புறம் இந்தக் கிழம் மண்டையைப் போட்டுடுத்துன்னா, நம்ம சொத்துல சரிபாதின்னா கேட்பா

``ஏண்டி இப்படி இருக்கே கோமு? எங்க அப்பா, நோக்கு கிழமாகிட்டாரா? வேண்டாண்டி, இப்படி பேசறதை இத்தோட நிறுத்திக்கோ. என்னமோ, மீந்து போன சாமான்ல சரிபாதி கொடுக்கிறேன்னு சொல்லிட்டு எல்லாத்தையும் நம்மாத்துக்குத்தானே எடுத்துண்டு வந்தே. இதுலே, அவா சொத்துல பாதி கேட்டுடுடப்போறாளேன்னு ஆதங்கம் வேறே. அப்போ என்ன சண்டையெல்லாம் வரப்போறதோ? உன்னை என்னால புரிஞ்சுக்கவே முடியல்லேடிஇந்த சொத்து எல்லாமே என் அப்பாவோட சொந்த உழைப்பால உருவானது புரிஞ்சுக்கோ. நம்ம சொத்தாமே, நம்ம சொத்து.?” என்று அலுத்துக் கொண்டான்.சங்கரன்.

``சரிங்க, உங்க அப்பாவோட சொந்த முயற்சி, உழைப்பு. எல்லாம் சரி, ஆனால் அவருக்கு வயசானதுக்கு அப்புறம் எல்லாத்தையும் நீங்கதானே இருபது முப்பது வருஷமா உழைச்சு காப்பாத்தி வந்திருக்கீங்க.”

``நீ சொல்றபடி பார்த்தா, நான் மட்டுமா உழைச்சேன், என் தம்பி பசுபதி என்னைவிட பலமடங்கு உழைச்சிருக்காண்டி. அவனைப்போல வேலக்காரங்ககிட்டே பேசி வேலை வாங்க என்னால் கூட முடியாதுடி. தெரிஞ்சுக்க. அப்படி ஒரு உழைப்பாளி, புத்திசாலி, சாதுர்யசாலி, சாமர்த்தியசாலி. தெரியுமா உனக்கு.? நான் என்ன செய்யணுமோ அதைச் சொல்லுவேன். அதை அவன் நன்னா, தெளிவாப் புரிஞ்சுண்டு நான் எதிர்பார்த்ததுக்கும் மேலே செஞ்சு முடிச்சுடுவான். அப்படி ஒரு டேலண்ட் அவனுக்கு.”

``நீங்க என்னதான் சொல்லுங்கோ, உங்களாட்டமா புத்திசாலித்தனம் அவருக்கு இல்லை. என்னைப் பொருத்தவரையில் அவரும் அவர் புள்ளைங்களும் நமக்கு வேலைக்காரங்க மாதிரிதான். சொத்துல எல்லாம் சம உரிமை கொடுக்க முடியாதுங்க. இப்பவே சொல்லிட்டேன். ஆமாம்.” பேராசையின் மிகுதியால் கோமளம் கொக்கரித்தாள்.

``நீ ஏண்டி உன்னை நீயே ஏமாத்திக்கறே? எதுவும் நம்ம கையில இல்லை. எல்லாம் அப்பா கையிலதான் இருக்கு. அவர் என்ன உயில் எழுதி வைக்கிறாரோ அதன்படிதான் எல்லாம் நடக்கும். சும்மா பேராசைப்பட்டு உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணான்னு நிற்காதேசங்கரன் எதார்த்தத்தை அவளுக்கு உணர்த்தப் பார்த்தான். அவளோ தான் பிடித்த முயலுக்கு மூணேகால்தான் என்று பிடிவாதம் பிடிப்பவளாயிற்றேசற்று நேரம் கழித்து ஏதோ நினைத்துக் கொண்டவளாக, ``ஏன்னா, உங்கப்பா எப்போன்னா உயில் எழுதுவார்? முன்னாடியே எழுதி வெச்சுட்டாரா? இல்லை, இனிமேல்தான் எழுதப்போறாரா? உயில் எழுதும்போது நம்பளையும் கலந்து பேசித்தானே எழுதுவார்? இல்லை அவராகவே எழுதிடுவாரா?” என்று கேள்வியைப் போட்டாள் கோமளம்.

``ஏண்டி கோமளம், இப்போ நோக்கு என்னடி வேணும்? இப்போவே அப்பாவை மண்டையைப் போடச்சொல்லுறியா என்ன? இப்போ உனக்கு என்ன குறைச்சல்? இப்போவும் உன் இஷ்ட்டத்துக்குத் தானே வாழ்ந்துண்டிருக்கே. இல்லை என் அப்பாதான் உன் விருப்பத்துக்கு மாறா ஏதாவது செய்யறாரா, சொல்றாரா? அவர் மனுஷ தெய்வம்டி. அவர் நூறு வயசு வாழணும்டி. இந்த ஊர்ல அவருக்கு இருக்கிற செல்வாக்கு என்ன, மதிப்பு என்ன, மரியாதை என்ன, உனக்கும் எல்லாம் தெரிஞ்சிருந்தும் இப்படி அனாயாசமா அவரைப் போய்…” சங்கரன் அவளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும், தனது தந்தையை நினைத்து கண்கலங்கினான்.  `இப்படி இருக்காளே இவள்; இவளை எப்படி திருத்தறது? அப்பாட்டயெல்லாம் பாசமாத்தான் பழகறா, சிலசமயத்துல எடுத்தெறிஞ்சு பேசிடறாஆனாலும் இவள் சுபாவத்தை நம்மால மாத்தமுடியல்லியே. கடவுளே, இவ கேட்கிற கேள்விக்கெல்லாம், நானும் பதில் சொல்லிண்டிருக்கேனே. இது அப்பாவுக்கு செய்யற துரோகமில்லையா? அப்பாவுக்குத் தெரியாம, இவள் சொல்பேச்சுக் கேட்டுக்கேட்டு எவ்வளவு பணம் திருடியிருக்கோம். பசுபதி பாவம் அப்பாவி. நேர்மை, நியாயம்னு இருக்கறவன். எல்லோரிட்டேயும் எவ்வளவு, அன்பா, பாசமா பழகறான். மன்னி, மன்னின்னி இவளையே சுத்திச்சுத்தி வரானே. நம்ம குழந்தைகளை அவந்தானே தூக்கி பாசத்தோட வளர்த்திருக்கான். ஆனால் அவங்களையும், அவங்க வளர்ந்ததுக்கு அப்புறம் இல்லாதது பொல்லாத்தைச் சொல்லி கெடுத்து வெச்சிருக்காளே. இதுக்கெல்லாம் இவளுக்கு என்ன தண்டனை கிடைக்கப்போறதோ. இவளுக்கு நானும் உடந்தைங்கறதுக்காக எனக்கும் அந்த தண்டனையில் பாதி, ஏன் முழுக்கவும் உண்டே. என்ன செய்யறது? பேய்க்கு வாழ்க்கைப் பட்டாச்சு வாழ்ந்துதானே ஆகணும்.”
என்றெல்லாம் சங்கரனின் மனது அலைபாய்ந்து சங்கடத்துக்குள்ளானது.

        இங்கு இவ்வாறிருக்க, சின்னசாமி அய்யர் இல்லத்தில், சின்னசாமி அய்யர், பிரம்பு சாய்வு நாற்காலையில் சாய்ந்து, கால்களை எதிரில் இருந்த ஒரு ஸ்டூலின்மேல் போட்டவண்ணம், அண்ணர்ந்து பார்த்தபடி படுத்திருந்தார். பகல் முழுவதும் வந்தவர்களுடன் பேசிப்பேசியே களைத்துவிட்டார். எப்படியும் அவருக்கு வயது எழுபத்தேழோ, எழுபத்தெட்டொ இருக்கும். இன்றளவும் அவர் நல்ல திட ஆரோக்யத்துடனேயே பவனிவருகிறார்அவர் கூடுமானவரையில் யாரிடமும் கோபப் படமாட்டார். தன் பொறுமைக்கும் மீறி சமாளிக்க முடியாத அளவுக்கு மற்றவர்கள் நடந்து கொண்டால் மட்டும் கோபம் வரும். இருந்தாலும் எதிலும் மிக்க நிதானமாகவே செயல்படுவார். யார் யார் எப்படிப் பட்டவர்கள், அவர்களின் எதிர்பார்ப்பு என்ன, நோக்கமென்ன என்றெல்லாம் அவர்கள் பேசும் பேச்சுக்களிலிருந்தே கண்டுபிடித்து விடுவார். ஆனால் நேரிடையாக யாரிடமும் தன் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்திவிட மாட்டார். மொத்தத்தில் நல்ல மனிதர். அப்படிப்பட்ட பெரியவர் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி என்ன யோசித்துக் கொண்டிருக்கிறார் என்பது நமக்குப் புரிய வாய்ப்பில்லை. அப்படியே சிறிது நேரம் சாய்ந்திருந்தவர், எதோ நினைத்துக் கொண்டவராக, நிமிர்ந்து உட்கார்ந்தார்.

        ``ஏண்டா பசுபதி, ஏண்டா உன்மன்னி இப்படி இருக்கா? வரவர அவளுக்கு எங்கிட்டேகூட மரியாதை குறைஞ்சுண்டு வர்றதேடா. உன் பொண்டாட்டியும்தான் இருக்கா, இந்தாத்துக்குள்ளே எப்படி நுழைந்தாளோ, இன்னிக்கும் அப்படியே தானேடா இருக்கா. கொஞ்சம்கூட மாறலையேடா. கோமளம் மட்டும் எப்படி இப்படி மாறினா? ஏண்டி மரகதம் உனக்காவது ஏதாவது புரியறதோடீ?” என்று கேட்க, படுத்துக்கொண்டிருந்த மரகதம் அம்மாள் , தனது கணவனின் குரல்கேட்டு எழுந்து அமர்ந்தவள். அவர் கேட்ட கேள்வியைப் புரிந்துகொண்டவளாக, ``ஏன்னா, அவளை நினைச்சுண்டு கவலைப் பட்டுண்டு இருக்கேள்? ரொம்ப பேராசை புடிச்சவ. தானும் தன்குடும்பமும் வாழ்ந்தாப் போதும்னு நினைக்கறவன்னாஅவள். பேசாம படுத்துண்டு தூங்குங்கோஎன்று தன் கணவனின் மனதை சமாதானம் செய்ய முயன்றாள் அம்மாது.

        ``இல்லேடி மரகதம் அப்படி சும்மா எதையும் சாதாரணமா நினைச்சுடப்படாதுடி. என் தலை சாஞ்சுடுத்துன்னா, அவளை கையில புடிக்க முடியாது. சங்கரனாலேயும் அவளை மீறி ஒண்ணும் செஞ்சுட முடியாது. செய்யவும் விடமாட்டாள். உன்னையும், பசுபதியையும், உன் குழந்தைகளையும் நடுத்தெருவில நிக்கவெச்சாலும் ஆச்சர்யப்படறதுக்கில்லேடி. அதனால நான் சில விஷயங்களை உடனடியா செஞ்சே ஆகணும்என்றவர் யோசனையில் ஆழ்ந்தார். சிறிது நேரத்தில் ஒரு முடிவுக்கும் வந்தார் 


                                                    ************************************www.tamilmanam.net